/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை முன் வாகனங்கள் 'பார்க்கிங்'
/
நிழற்குடை முன் வாகனங்கள் 'பார்க்கிங்'
ADDED : ஜூலை 05, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:நிழற்குடை முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள மக்களின் வசதிக்காக நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது, இந்த நிழற்குடை முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணியர் நிழற்குடையில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, போக்குவரத்து போலீசார் நிழற்குடை அமைந்துள்ள இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.