/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரண்வாயல் நெடுஞ்சாலை மீடியனில் தொடரும் கட்சி கொடி, பேனர் கலாசாரம்
/
அரண்வாயல் நெடுஞ்சாலை மீடியனில் தொடரும் கட்சி கொடி, பேனர் கலாசாரம்
அரண்வாயல் நெடுஞ்சாலை மீடியனில் தொடரும் கட்சி கொடி, பேனர் கலாசாரம்
அரண்வாயல் நெடுஞ்சாலை மீடியனில் தொடரும் கட்சி கொடி, பேனர் கலாசாரம்
ADDED : ஜன 27, 2025 02:06 AM

திருவள்ளூர்:சென்னை - பள்ளிக்கரணையில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ, 23, என்ற பெண், லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலையில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டும், திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை மீடியனில் கொடிக்கம்பங்கள், விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.
இதில், நேற்று, திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அரண்வாயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட சட்ட ஆலோசனை மையம் மற்றும் இலவச இ - சேவை மையம் தொடக்க விழா நடந்தது.
இதில், பங்கேற்க வரும் தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட மாவட்டச் செயலர் பிரகாசம் என்பவரை வரவேற்று, நெடுஞ்சாலை மீடியனில் கொடிக்கம்பங்கள் மறறும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கு, காவல்துறையினர் சரியான முறையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நெடுஞ்சாலை மீடியனில் கொடிக்கம்பங்கள், விளம்பர பேனர்கள் வைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, பகுதிவாசிகள் கருத்து தெரிவித்தனர்.
எனவே, நெடுஞ்சாலை மீடியன் பகுதியில் கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.