/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் கட்சி கொடி கம்பங்கள், பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்
/
திருத்தணியில் கட்சி கொடி கம்பங்கள், பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்
திருத்தணியில் கட்சி கொடி கம்பங்கள், பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்
திருத்தணியில் கட்சி கொடி கம்பங்கள், பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்
ADDED : மே 08, 2025 03:02 AM

திருத்தணி:தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜன., 27ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும்,- பொது இடங்களிலும் வைத்துள்ள கட்சி கொடிக் கம்பங்களை, தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
ஆனால், கட்சியினர் கொடி கம்பங்கள், பெயர் பலகைகள் அகற்றாமல் இருந்ததால், நேற்று, திருத்தணி நகராட்சியில், கட்சி கொடி கம்பங்கள், பலகைகள் அகற்றும் பணி நடந்தது.
திருத்தணி வருவாய் துறையினர், நெடுஞ்சாலைyf துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியோர் ஒன்றிணைந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் உதவியுடன், சித்துார் சாலை, கடப்பா டிரங்க் ரோடு, ம.பொ.சி., சாலை மற்றும் அரக்கோணம் உட்பட 30 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கட்சியின் கொடிகம்பங்கள், மத ரீதியான கொடிகள், கம்பங்கள் மற்றும் பெயர் பலகைகள் அப்புறப்படுத்தினர்.