/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடையை மறைத்து பேனர் பழவேற்காடில் பயணியர் தவிப்பு
/
நிழற்குடையை மறைத்து பேனர் பழவேற்காடில் பயணியர் தவிப்பு
நிழற்குடையை மறைத்து பேனர் பழவேற்காடில் பயணியர் தவிப்பு
நிழற்குடையை மறைத்து பேனர் பழவேற்காடில் பயணியர் தவிப்பு
ADDED : மார் 12, 2024 08:40 PM

பழவேற்காடு:பழவேற்காடு பஜார் பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் அமைந்து உள்ளது. பயணியர் வசதிக்காக இங்கு நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது.
சமீப காலமாக, இந்த நிழற்குடையை மறைத்து அரசியல் கட்சிகளின் பேனர்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன. எப்போது இங்கு பேனர்கள் இருப்பதால் நிழற்குடை இருப்பதே தெரியாத நிலை உள்ளது.
இதனால் பயணியர் பழவேற்காடு பஜார் பகுதியின் சாலையோரங்களில் பேருந்திற்கு காத்திருக்கின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பயணியர் நிழலை தேடி அங்கும் இங்கும் அலைந்து, கடைகளின் ஓரங்களில் தஞ்சம் அடையும் நிலை உள்ளது.
பேருந்து நிழற்குடையும் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இருக்கைகள் சேதம் அடைந்தும், துருப்பிடித்தும் உள்ளது. பேருந்து நிழற்குடையை மறைத்து பேனர் வைக்கப்படுவதை தடுக்கவும், தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

