/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏழே மாதத்தில் குப்பைக்கு போன நிழற்குடை அதிகாரிகள் அலட்சியத்தால் பயணியர் அவதி
/
ஏழே மாதத்தில் குப்பைக்கு போன நிழற்குடை அதிகாரிகள் அலட்சியத்தால் பயணியர் அவதி
ஏழே மாதத்தில் குப்பைக்கு போன நிழற்குடை அதிகாரிகள் அலட்சியத்தால் பயணியர் அவதி
ஏழே மாதத்தில் குப்பைக்கு போன நிழற்குடை அதிகாரிகள் அலட்சியத்தால் பயணியர் அவதி
ADDED : பிப் 15, 2024 02:29 AM

கடம்பத்துார்:மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணுார் ஊராட்சி.
இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ வாயிலாக, சுங்குவார்சத்திரம் மற்றும் பேரம்பாக்கம் சென்று வருகின்றனர்.
இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதி வாசிகள் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, 2021 - 22ம் ஆண்டு, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட்டு, 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வந்தது.
அதன்பின், மப்பேடு - சுங்குவார்சத்திரம் சாலை விரிவாக்கத்தின் போது, 2022 ஆகஸ்ட் மாதம் நிழற்குடை அகற்றப்பட்டு, தற்போது வரை சாலையோரம் குப்பையில் கிடக்கிறது.
இதனால், நிழற்குடை இல்லாமல் கண்ணுார் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

