/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு - தனியார் பேருந்து யார் முந்துவது போட்டா போட்டியால் பயணியர் கலக்கம்

UPDATED : மே 23, 2025 06:24 AM
ADDED : மே 23, 2025 03:16 AM

திருவாலங்காடு:திருவள்ளூரில் இருந்து திருவாலங்காடு வழியாக அரக்கோணம், திருத்தணி, கனகம்மாசத்திரம், தக்கோலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அதேபோன்று தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
திருவாலங்காடு தேரடி நிறுத்தத்தில் இருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் குறைந்தது 100 பயணியர் பேருந்து வாயிலாக திருவள்ளூர், அரக்கோணம் செல்வர்.
இங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணியரை ஏற்றி செல்ல தனியார், அரசு பேருந்துகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு முதலில் யார் செல்வது என முந்துகின்றன.
இதனால் தேரடி நிறுத்தத்தில் பேருந்துகள் முன்னும் பின்னுமாக சாலைக்கு குறுக்கே நிழற்குடைக்கு 10 மீட்டர் முன்பாக நிறுத்தப்படுகிறது.
இதனால் பயணியர் ஓடி வந்து ஏறும் போது முதியவர்கள், பெண் பயணியர் விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது.
பேருந்துகள் சாலையில் குறுக்காக நிற்பதால் எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.