/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்- பிராட்வே மாநகர பேருந்து மீண்டும் இயக்க பயணியர் கோரிக்கை

ADDED : டிச 20, 2024 10:21 PM
திருவள்ளூர்:சென்னை மாநகர பேருந்து சேவை திருவள்ளூருக்கு நீட்டிக்கப்பட்ட சமயத்தில், சென்னை பிராட்வே- திருவள்ளூருக்கு தடம் எண் 512 மாநகர பேருந்து இயக்கப்பட்டது. செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், ஆவடி, அம்பத்துார் வழியாக இயக்கப்பட்ட இந்த பேருந்தில், மருத்துவம், பள்ளி, கல்லுாரி, மற்றும் அரசு, தனியார் பணிக்கு செல்பவர்கள் பயணித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த வழித்தட பேருந்து, எவ்வித முன் அறிவிப்பு இன்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், இந்த பேருந்தை நம்பியிருந்த முதியோர், மாணவ, மாணவியர் அதிருப்தி அடைந்து உள்ளனர். மேலும், அம்பத்துார் எஸ்டேட்டில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்படும் பேருந்தும், ஆவடி- திருவள்ளூர் 'கட் சர்வீஸ்' ஆக இயக்கப்படுகிறது.
எனவே, இந்த பேருந்துகளை வழக்கமான வழித்தடத்தில் பிராட்வே வரை இயக்க வேண்டும் என, பயணிகள், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.