/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
/
நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : செப் 30, 2025 12:39 AM
ஊத்துக்கோட்டை:பாலவாக்கம் கிராமத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் சாலையில் உள்ளது பாலவாக்கம் கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசித் தேவைக்கு, ஊத்துக்கோட்டை செல்கின்றனர். பெரியபாளையம், தேர்வாய் தொழிற்பூங்கா, பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள மக்கள் செல்பவர்கள், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் அமர்ந்து பேருந்து ஏறிச் செல்வர்.
இந்த நிழற்குடை சிதிலமடைந்து காணப்பட்டதால், சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது. புதிதாக நிழற்குடை அமைக்கவில்லை. விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளது. அதற்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, பாலவாக்கம் கிராமத்தில் ஏற்கனவே, இருந்த இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.