/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னேற்பாடுகளின்றி புதுப்பிப்பு பணி ஆவடி பஸ் நிலையத்தில் பயணியர் அவதி
/
முன்னேற்பாடுகளின்றி புதுப்பிப்பு பணி ஆவடி பஸ் நிலையத்தில் பயணியர் அவதி
முன்னேற்பாடுகளின்றி புதுப்பிப்பு பணி ஆவடி பஸ் நிலையத்தில் பயணியர் அவதி
முன்னேற்பாடுகளின்றி புதுப்பிப்பு பணி ஆவடி பஸ் நிலையத்தில் பயணியர் அவதி
ADDED : ஜூன் 26, 2025 02:04 AM

ஆவடி, முன்னேற்பாடுகளின்றி துவக்கப்பட்ட ஆவடி பேருந்து நிலைய புதுப்பிப்பு பணிகளால், பயணியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பக்தவத்சல புரத்தில் 1.93 ஏக்கர் பரப்பளவில் ஆவடி பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
ஆவடியில் இருந்து கோயம்பேடு, திருவான்மியூர், செங்குன்றம், தாம்பரம், திருவள்ளூர், பெரியபாளையம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆவடியில் இருந்து, தினமும் 55 வழித்தடங்களில் 221 பேருந்துகள் 1,274 நடை இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் வாயிலாக 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தினமும் பயனடைந்து வருகின்றனர்.
தவிர, செங்கோட்டை, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக சுத்தமான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சார்பில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய, பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த வாரம் துவங்கியது.
முதற்கட்டமாக, பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், பேருந்துகள் உள்ளே வந்து பயணியரை ஏற்றி செல்வது சிரமமாக உள்ளது. பயணியர் மட்டுமல்லாமல் போக்குவரத்து ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.
தற்காலிக பேருந்து நிலையம் எதுவும் அமைக்காமல், ஆவடி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி துவங்கி உள்ளது. இதனால், குறித்த காலத்திற்குள் திட்டத்தை முடிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதற்கு தீர்வாக, பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள எச்.வி.எப்., மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தால், பயணியர் சிரமமின்றி பயணிப்பர்.
- சடகோபன், பட்டாபிராம்.