/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்கூரை இல்லாத பஸ் நிலையம் நிழல் தேடி காத்திருக்கும் பயணியர்
/
நிழற்கூரை இல்லாத பஸ் நிலையம் நிழல் தேடி காத்திருக்கும் பயணியர்
நிழற்கூரை இல்லாத பஸ் நிலையம் நிழல் தேடி காத்திருக்கும் பயணியர்
நிழற்கூரை இல்லாத பஸ் நிலையம் நிழல் தேடி காத்திருக்கும் பயணியர்
ADDED : ஜூன் 02, 2025 11:13 PM

கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்த நிழற்கூரையின் இரும்பு துாண் ஒன்று, 2016 வர்தா புயலின் போது லேசாக சாய்ந்தது. அடுத்த ஆண்டுகளில் பாரம் தாங்காமல், இரும்பு துாண்கள் ஒவ்வொன்றாக சாய துவங்கியது.
இதனால், 2021ம் ஆண்டு இறுதியில், புதிய நிழற்கூரை அமைப்பதற்காக, சாய்ந்திருந்த நிழற்கூரை முற்றிலும் அகற்றப்பட்டது. அதன்பின், பல்வேறு காரணங்களால் நிழற்கூரை அமைக்க முடியாமல் போனது.
நான்கு ஆண்டுகளாக நிழற்கூரை இல்லாத அவலநிலையில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் உள்ளது. மழை, வெயில் காலங்களில் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைகள் மற்றும் மரங்களின் கீழ் ஒதுங்கி நின்றபடி பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் பயணியர் உள்ளனர்.
நிலையத்தில் இருக்கைகள் இருந்தும், நிழற்கூரை இல்லாததால், பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. எனவே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் தாமதிக்காமல், பயணியர் நலன் கருதி, உடனடியாக பேருந்து நிலையத்தில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.