/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனையில் மின்துாக்கி இயங்காததால் நோயாளிகள் அவதி
/
அரசு மருத்துவமனையில் மின்துாக்கி இயங்காததால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனையில் மின்துாக்கி இயங்காததால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனையில் மின்துாக்கி இயங்காததால் நோயாளிகள் அவதி
ADDED : செப் 08, 2025 01:47 AM

திருத்தணி:அரசு மருத்துவமனையில் இரண்டு மின்துாக்கிகளும் இயங்காததால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
திருத்தணியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஐந்து அடுக்குமாடி கொண்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு, 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடம், ஐந்து மாதங்களுக்கு முன், தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பழைய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள், இரண்டு மாதங்களுக்கு முன், புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தரைதளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, மாத்திரை வழங்கும் பிரிவு மற்றும் ரத்த பரிசோதனை மையம் ஆகிய பிரிவுகள் மட்டுமே இயங்கி வருகிறது. முதல் மாடியில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளது. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் மாடியில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகள் வசதிக்காக, புதிய கட்டடத்தில் இரண்டு மின்துாக்கி வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு மின்துாக்கி மட்டுமே இயங்கி வருகிறது. மற்றொரு மின்துாக்கி சோதனை ஓட்டம், மின் ஒயர் பராமரிப்பு என, பல்வேறு காரணங்களால் தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளது.
இதனால், ஒரு மின்துாக்கி மூலம் நோயாளிகள் சென்று வந்தனர். தற்போது, அந்த மின்துாக்கியும் இயக்கப்படவில்லை. இதனால், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகளுக்கு படி ஏறிச் செல்ல முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரண்டு மின்துாக்கி களையும் தொ டர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.