/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர், மின்விளக்கு வசதியின்றி பட்டமந்திரி கிராமம் பரிதவிப்பு
/
குடிநீர், மின்விளக்கு வசதியின்றி பட்டமந்திரி கிராமம் பரிதவிப்பு
குடிநீர், மின்விளக்கு வசதியின்றி பட்டமந்திரி கிராமம் பரிதவிப்பு
குடிநீர், மின்விளக்கு வசதியின்றி பட்டமந்திரி கிராமம் பரிதவிப்பு
ADDED : ஜூன் 14, 2025 01:47 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம் வல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டமந்திரி கிராமத்தில், 1,300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், வடசென்னை அனல் மின்நிலையத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாயில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
தொட்டி அமைத்து இரண்டு ஆண்டுகளான நிலையில், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. வல்லுார் பகுதியில் உள்ள கீழ்நிலை தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லாததால், கிராமவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதேபோல், ஆறு மாதங்களாக பட்டமந்திரி பகுதி முழுதும் மின்விளக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளன. தெருச்சாலைகள் இருண்டு கிடப்பதால், மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். கால்வாய்களில் கழிவுநீர் மற்றும் குப்பை குவிந்து சுகாதாரமற்ற நிலை உள்ளது.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
குடிநீர் தட்டுப்பாடு, வீணாகும் மேல்நிலை குடிநீர் தொட்டி, மின்விளக்கு எரியாதது குறித்து ஊராட்சி செயலர், பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வன்னிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அது, பட்டமந்திரி கிராமத்தை கடந்து, வல்லுார் பகுதியில் உள்ள கீழ்நிலை தொட்டிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து எங்கள் கிராமத்திற்கு விநியோகிக்கப்படுகிறது.
எங்கள் கிராமத்திலேயே கீழ்நிலை தொட்டி அமைத்தால், 1,300 குடும்பங்களின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.