/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஞ்செட்டி கோவிலுக்கு பேவர் பிளாக் சாலை
/
பஞ்செட்டி கோவிலுக்கு பேவர் பிளாக் சாலை
ADDED : மார் 01, 2024 07:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டியில், ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் கோபுர முகப்பில் உள்ள சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சோழவரம் ஒன்றிய நிர்வாகம் சார்பில், பஞ்செட்டி கோவில் முகப்பு சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற, 15வது நிதி குழு மானியத்தின் கீழ், 5.75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, 90 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் கொண்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவராத்திரிக்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

