/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரராகவர் கோவிலில் பவித்ர உத்சவம் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை
/
வீரராகவர் கோவிலில் பவித்ர உத்சவம் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை
வீரராகவர் கோவிலில் பவித்ர உத்சவம் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை
வீரராகவர் கோவிலில் பவித்ர உத்சவம் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை
ADDED : செப் 08, 2025 11:31 PM

திருவள்ளூர் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை நடந்தது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பவித்ர உத்சவம், கடந்த 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை நடந்து வருகிறது. தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக இந்த உத்சவம் நடக்கிறது.
இதை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, தினமும் காலை, இரவு சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம் சாத்துமறை நடந்து வருகிறது.
மாலை பெருமாள் மாடவீதி புறப்பாடும் நடந்து வருகிறது.
கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை, காலை 9:30 - 11:00 மணி வரையும், இரவு 7:00 - 8:30 மணி வரையும் நடைபெறும்.
இந்த ஏழு நாட்களும் உற்சவர் வீரராகவ பெருமாள், மாலை 5:30 மணியளவில் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பார்.