/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் தனி வனச்சரகமாக உருவாகிறது
/
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் தனி வனச்சரகமாக உருவாகிறது
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் தனி வனச்சரகமாக உருவாகிறது
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் தனி வனச்சரகமாக உருவாகிறது
ADDED : ஆக 03, 2025 11:04 PM
சென்னை:வேடந்தாங்கல் மற்றும் பழவேற்காடு பகுதிக்கு, தனித்தனியாக புதிய வனச்சரகங்கள் ஏற்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில், வனத்துறை நிர்வாக வசதிக்காக, பல்வேறு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருவள்ளூரில், பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த இரண்டு இடங்களும், சிறப்பு முக்கியத்துவம் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆனால், இந்த இரு சரணாலயங்களும், வண்டலுார் உயிரியல் பூங்காவின் கட்டுப்பாட்டில், ஆறாவது மண்டலமாக இதுவரை நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இதன்படி, வேடந்தாங்கல், பழவேற்காடு பகுதிகள் ஒரே வனச்சரகர் நிர்வாகத்தில் இருந்து வந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல், திருவள்ளூரில் உள்ள பழவேற்காடுபறவைகள் சரணாலயங்களை, ஒரே வனச்சரகர் நிர்வகிப்பதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், வண்டலுார் உயிரியல் பூங்காவின் கீழ் இருந்த, ஆறாவது மண்டலம் கலைக்கப்பட்டு, வேடந்தாங்கல், பழவேற்காடு பறவைகள் சரணாலயங்கள், தனித்தனி வனச்சரகங்களாக உருவாக்கப்பட உள்ளன.
இதையடுத்து இந்த இரண்டு இடங்களுக்கு, தனித்தனி வனச்சரகர்கள் நியமிக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.