/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மயில் பலி?
/
தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மயில் பலி?
தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மயில் பலி?
தனியார் நிறுவன வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மயில் பலி?
ADDED : மே 16, 2025 02:37 AM

ஆவடி:ஆவடி, பருத்திப்பட்டு, வி.ஜி.என்., தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் மனோஜ், 38; தனியார் நிறுவன மேலாளர். நேற்று காலை 8:30 மணியளவில், இவரது நிறுவனத்தில் மயில் ஒன்று இறந்து கிடப்பதாக, காவலாளி தகவல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி வேட்டை தடுப்பு போலீசார், இறந்த பெண் மயிலை கைப்பற்றி, வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு பிரேத பரிசோதனை செய்த பின், மயில் அடக்கம் செய்யப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குடியிருப்பில் உள்ள மின்மாற்றியில் எதிர்பாராத விதமாக உரசிய போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு, மயில் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.