/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி இணைப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் அவதி
/
கும்மிடி இணைப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் அவதி
கும்மிடி இணைப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் அவதி
கும்மிடி இணைப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் அவதி
ADDED : பிப் 09, 2025 12:25 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், ரயில் நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள அந்த சாலையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை ஒட்டி, பாதசாரிகள் நடந்து செல்வதற்கான நடைபாதை உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை, ரயில்வே துறையினர் அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது, அங்கிருந்து கடைகள் விட்டு சென்ற பழைய மர பொருட்கள், நடைபாதையில் குவிக்கப்பட்டிருந்தன.
அதை அப்போதே அகற்றாமல் விட்டதால், தற்போது நடைபாதை முழுதும், அந்த மரக்கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. அதன் இடையே பாதசாரிகள் கடந்து செல்லும் போது சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர், மரக் கழிவுகளை அகற்றி, நடைபாதையை முறையாக பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.