/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிக்னலை மதிக்காத பாதசாரிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சிக்னலை மதிக்காத பாதசாரிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சிக்னலை மதிக்காத பாதசாரிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சிக்னலை மதிக்காத பாதசாரிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 12, 2025 11:24 PM

திருமழிசை, சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2018 இறுதியில் துவங்கியது. மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீட்டர் நீள சாலை விரிவாக்க பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் செல்லும் வகையில், இருவழிப்பாதை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு சாலையை பயன்படுத்தி நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், பாப்பன்சத்திரம், செட்டிபேடு, தண்டலம், குத்தம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், நெடுஞ்சாலையை கடந்து செல்ல கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல், நெடுஞ்சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.