/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் சாலை சீரமைப்பு பணி திருமழிசை பகுதி மக்கள் சிரமம்
/
கிடப்பில் சாலை சீரமைப்பு பணி திருமழிசை பகுதி மக்கள் சிரமம்
கிடப்பில் சாலை சீரமைப்பு பணி திருமழிசை பகுதி மக்கள் சிரமம்
கிடப்பில் சாலை சீரமைப்பு பணி திருமழிசை பகுதி மக்கள் சிரமம்
ADDED : ஜூலை 04, 2025 03:09 AM

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருமழிசை பேரூராட்சி 12வது வார்டு பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து பரிதாப நிலையில் உள்ளன.
இதையடுத்து பேரூராட்சி சார்பில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு பணி துவங்கி நடந்து வந்தது.
கடந்த 9 மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் குடியிருப்பு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.