/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் தொட்டியை பாதுகாக்க 'பென்சிங்' மாத இறுதிக்குள் பணி முடிக்க உத்தரவு
/
குடிநீர் தொட்டியை பாதுகாக்க 'பென்சிங்' மாத இறுதிக்குள் பணி முடிக்க உத்தரவு
குடிநீர் தொட்டியை பாதுகாக்க 'பென்சிங்' மாத இறுதிக்குள் பணி முடிக்க உத்தரவு
குடிநீர் தொட்டியை பாதுகாக்க 'பென்சிங்' மாத இறுதிக்குள் பணி முடிக்க உத்தரவு
ADDED : டிச 27, 2024 01:47 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப, 10,000 லிட்டர் முதல், அதிகபட்சமாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு வரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு அதன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 4,200 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 10,000 லிட்டர் கொள்ளளவில் 850, மற்றும் 30,000 லிட்டரில் 950, 1 லட்சம் லிட்டரில் 1,800, மற்றும் 2 லட்சம் லிட்டரில் 600 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என, மாவட்டத்தில் 4,200 உள்ளன. வெளியாட்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மீது ஏறுவதை தடுக்க, கான்கிரீட் 'பென்சிங்' தூண்கள் அமைத்து இரும்பு கம்பிகளை கொண்டு வேலி அமைக்க, 15வது நிதிக்குழு மான்யத்தில் நிதி ஒதுக்கப்பட்டு மாவட்டம் முழுதும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் வெளியாட்கள் ஏறி அசம்பாவிதம் செய்யாத வகையில் பில்லர் நடப்பட்டு பென்சிங் வேலி அமைக்கப்படுகிறது. 10,000 லிட்டருக்கு 39,500 ரூபாயும், 30,000 லிட்டருக்கு 45,000 ரூபாயும், 1 - 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு 55,000 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் பணி முடிக்க திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. இந்த வேலி அமைக்கப்பட்டதும், பூட்டு போடப்பட்டு ஒரு சாவி, ஊராட்சி நிர்வாகத்திடமும், மற்றொன்று டேங்க் ஆப்பரேட்டரிடமும் ஒப்படைக்கப்படும்.
வெளியாட்கள் இதை மீறி ஏறினால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.