/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆளுங்கட்சியினர் தலையீடு குறுந்தகவல் வராததால் மக்கள் புலம்பல்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆளுங்கட்சியினர் தலையீடு குறுந்தகவல் வராததால் மக்கள் புலம்பல்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆளுங்கட்சியினர் தலையீடு குறுந்தகவல் வராததால் மக்கள் புலம்பல்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆளுங்கட்சியினர் தலையீடு குறுந்தகவல் வராததால் மக்கள் புலம்பல்
ADDED : செப் 12, 2025 10:17 PM
திருவாலங்காடு:திருவாலங்காடில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், சில மனுக்கள் பதிவு செய்ததற்கான குறுந்தகவல் வராததால், மனு அளித்த மக்கள் புலம்புகின்றனர். ஆளுங்கட்சியினர் தலையீடால் அதிகாரிகள் திணறுகின்றனர்.
தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஜூலை 15 - நவ., 7ம் தேதி வரை நடக்கிறது. இம்முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
பட்டா மாறுதல், சொத்து வரி பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் பல்வேறு உதவித்தொகைகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், தொடர்ந்து முகாம் நடந்து வருகிறது. இதில் விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு குறுந்தகவல் வருவது வழக்கம். ஆனால், பட்டா மாறுதல் போன்ற வருவாய்த்துறை தொடர்பான மனுக்களும் அளிக்கப்படுகிறது.
இந்த மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றாமல், அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால், விண்ணப்பித்த பலர் குறுந்தகவல் ஏதும் வரவில்லை என புலம்புகின்றனர். மாவட்டம் முழுதும் பல இடங்களில் இந்த பிரச்னை உள்ளது.
பட்டா விவகாரங்களில் குளறுபடி உள்ள காரணங்களால் நிராகரித்தால், அது முகாமில் பெற்று நிராகரிக்கப்பட்ட மனுக்கள் கணக்கில் வந்து விடும் என்பதால், இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
'ஜீரோ நிராகரிப்பு, கொடுத்த அனைத்து மனுவுக்கும் தீர்வு' என, அரசு அறிவிக்க காத்திருப்பதால், இந்நிலை ஏற்படுவதாக வருவாய் துறையினரே குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பதில், ஆளும் கட்சியினரின் தலையீடும் அதிகம் உள்ளதால், அதிகாரிகள் திக்குமுக்காடுகின்றனர்.