/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரவுடிகள் அச்சுறுத்தலால் மக்கள் பீதி காவல் துறை விழிப்பது எப்போது? காவல் துறை விழிப்பது எப்போது?
/
ரவுடிகள் அச்சுறுத்தலால் மக்கள் பீதி காவல் துறை விழிப்பது எப்போது? காவல் துறை விழிப்பது எப்போது?
ரவுடிகள் அச்சுறுத்தலால் மக்கள் பீதி காவல் துறை விழிப்பது எப்போது? காவல் துறை விழிப்பது எப்போது?
ரவுடிகள் அச்சுறுத்தலால் மக்கள் பீதி காவல் துறை விழிப்பது எப்போது? காவல் துறை விழிப்பது எப்போது?
ADDED : செப் 06, 2025 11:40 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் ரவுடிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு கனகம்மாசத்திரம், திருவாலங்காடு காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல் எல்லைக்கு உட்பட்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன; லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
தற்போது, சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், களாம்பாக்கம், மணவூர் உள்ளிட்ட கிராமங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
இந்த கிராமங்களை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தினமும் அத்தியாவசிய தேவைகளுக்கு இப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், திருவாலங்காடு காவல் எல்லைக்குட்பட்ட சின்னம்மாபேட்டை, களாம்பாக்கம், மணவூர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
சின்னம்மாபேட்டையில் வாரந்தோறும் சனிக்கிழமை நடக்கும் சந்தையில், சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், மப்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள் ஒன்றுகூடி, அவ்வப்போது போதையில் தங்களுக்குள் தாக்கி கொள்கின்றனர்.
மேலும், வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி கொண்டு, பணத்தை தராமல் கத்தியை காட்டி மிரட்டி செல்வதும் தொடர்கிறது. அவர்களுக்குள்ளாகவே சிலர் சண்டையிட்டு, கத்தியுடன் வலம் வரும் அவலமும் தொடர்கிறது. இதனால், மக்கள் மற்றும் வியாபாரிகள் பீதியடைந்து உள்ளனர்.
மேலும், தங்கள் பகுதியை போலீசார் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால், ரவுடியிசம் வளர போலீசாரே உதவுகின்றனரா என கேள்வி எழுந்துள்ளது.
புறக்காவல் நிலையம் இரண்டு ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதும், ரவுடிகள் அட்டகாசத்திற்கு காரணம் என புகார் தெரிவிக்கின்றனர். எனவே, திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்த சுக்லா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.