/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் குடியிருப்புகளுக்கு மழைநீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு
/
பொன்னேரியில் குடியிருப்புகளுக்கு மழைநீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு
பொன்னேரியில் குடியிருப்புகளுக்கு மழைநீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு
பொன்னேரியில் குடியிருப்புகளுக்கு மழைநீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு
ADDED : நவ 30, 2024 11:57 PM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாயுமான் செட்டி தெருவில், 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. தொடர் மழையின் காரணமாக நேற்று, இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
வீட்டு உபயோக பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகின. வீடு முழுதும் தண்ணீர் நிரம்பிய நிலையில், இருக்க இடமின்றி கட்டில், நாற்களில் மீது அமர்ந்திருந்தனர். சமையல் அறைகளிலும் தண்ணீர் புகுந்ததால் சமையல் செய்யவும் வழியின்றி பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
அங்குள்ள மழைநீர் கால்வாய் குப்பை குவிந்தும், துார்ந்தும் கிடந்ததால், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற வழியின்றி தவித்தனர்.
இதனால் கொதிப்படைந்த குடியிருப்புவாசிகள், 'மழைநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கபடுவதில்லை' எனக்கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குரவத்து பாதித்தது.
குடியிருப்புவாசிகளின் மறியல் போராட்டத்தை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் கால்வாய்கள் துார்வாரப்பட்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.