/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளமாக மாறிய ஈக்காடு மசூதி தெரு நடக்க கூட வழியின்றி மக்கள் தவிப்பு
/
குளமாக மாறிய ஈக்காடு மசூதி தெரு நடக்க கூட வழியின்றி மக்கள் தவிப்பு
குளமாக மாறிய ஈக்காடு மசூதி தெரு நடக்க கூட வழியின்றி மக்கள் தவிப்பு
குளமாக மாறிய ஈக்காடு மசூதி தெரு நடக்க கூட வழியின்றி மக்கள் தவிப்பு
ADDED : செப் 23, 2025 12:13 AM

ஈக்காடு:ஈக்காடு மசூதி தெருவில், குண்டும் குழியுமான சாலையில், குளம்போல் மழைநீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் நடக்க வழியின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சியில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி, திருவள்ளூர் - செங்குன்றம் சாலையிலும், திருவள்ளூர் நகராட்சி பகுதியை ஒட்டியும் அமைந்துள்ளதால், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
ஊராட்சியில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவில் இல்லை.
இங்குள்ள மசூதி தெருவில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் உள்ள சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், சமீபத்தில் பெய்த மழைநீர், சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, இத்தெருவில் வசிப்போர், மாணவ - மாணவியர், சாலையில் நடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
அவசர காலங்களில், ஆட்டோக்கள்கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை சேதமடைந்துள்ளது.
எனவே, சேதமடைந்த சாலையை, ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, மசூதி தெரு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.