/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்தளவு மின் விநியோகம் தூங்க முடியாமல் மக்கள் அவதி
/
குறைந்தளவு மின் விநியோகம் தூங்க முடியாமல் மக்கள் அவதி
குறைந்தளவு மின் விநியோகம் தூங்க முடியாமல் மக்கள் அவதி
குறைந்தளவு மின் விநியோகம் தூங்க முடியாமல் மக்கள் அவதி
ADDED : ஜூன் 20, 2025 08:10 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சி பராசக்தி நகர், பவானி நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளுக்கு 14 கி.மீ., தூரத்தில் உள்ள கடம்பத்தூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இரண்டு மாதமாக 24 மணி நேரமும் குறைந்தளவு மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.
குறிப்பாக, பராசக்தி நகர் பகுதியில், இரவு முழுதும் 110 --- 140 வோல்ட் என்றளவில், மிகவும் குறைந்த மின்னழுத்தம் தொடர்வதால், மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன.
மின்விசிறி, 'ஏசி' உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் இயக்கமின்றி புழுக்கத்தால் குழந்தைகள், முதியோர் இரவில் தூக்கத்தை தொலைத்து கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.