/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க தாமதம் நீண்ட நேரம் காத்திருப்பதால் மக்கள் அதிருப்தி
/
ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க தாமதம் நீண்ட நேரம் காத்திருப்பதால் மக்கள் அதிருப்தி
ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க தாமதம் நீண்ட நேரம் காத்திருப்பதால் மக்கள் அதிருப்தி
ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க தாமதம் நீண்ட நேரம் காத்திருப்பதால் மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 19, 2025 01:49 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் உட்பட ஒன்பது தாலுகாக்களில், 1,108 ரேஷன் கடைகள் உள்ளன.
இங்கு, உணவு பொருட்கள் சரியான எடையில் வழங்க வேண்டும் என்பதற்காக, ரேஷன் கடைகளில் எடைபோடும் எலக்ட்ரானிக் தராசை, பி.ஓ.எஸ்., மிஷினுடன் புளூடூத் வாயிலாக இணைத்து, எடை போடும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதனால், தராசில் எடை போடும் போது, அளவு குறையாமல் துல்லியமாக இருக்கும். இந்த நடைமுறை பயனாளிகளின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பொருட்கள் வாங்க நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதால், கடும் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி தாலுகா திருவாலங்காடு அருகே பழையனுார் கிராமத்தில், 654 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பொருட்கள் வழங்க காலதாமதம் செய்வதாக புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து பழையனுார் பகுதிமக்கள் கூறியதாவது:
புளூடூத் இணைப்பு தராசில் எடை போட, ஒரு கார்டுக்கு 5 - 10 நிமிடங்கள் வரை ஆகிறது. இதற்கு முன் பில் போட்ட பின், பொருட்கள் வழங்கப்பட்டன.
தற்போது, பொருட்கள் வாங்கிய பின், பில் போடப்படுகிறது. ஒரு குடும்ப அட்டைதாரர்கள் நான்கு பொருட்கள் வாங்கும்போது பொருட்களின் அளவு, ஒன்றன்பின் ஒன்றாக தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டு, பில் பிரின்ட் எடுக்கப்படுகிறது. மேலும், இணையதளத்தில் பிரச்னை இருந்தால் அதிக நேரம் காத்திருக்க வேண்டும்.
ஒரு மணி நேரத்துக்கு, 5 - 10 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால், ரேஷன் கடைக்கு வந்தால், ஒரு நாள் முழுதும் காத்திருக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.