/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் குளமாக மாறும் குளத்தால் மக்கள் அதிருப்தி
/
கழிவுநீர் குளமாக மாறும் குளத்தால் மக்கள் அதிருப்தி
கழிவுநீர் குளமாக மாறும் குளத்தால் மக்கள் அதிருப்தி
கழிவுநீர் குளமாக மாறும் குளத்தால் மக்கள் அதிருப்தி
ADDED : செப் 06, 2025 02:45 AM
வயலுார்:வயலுார் ஊராட்சியில் நல்லதண்ணீர்குளம், கழிவுநீர் குளமாக மாறி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்தில் வயலுார் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஊராட்சி அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே நல்லதண்ணீர்குளம் உள்ளது. இந்த தண்ணீரை பகுதிமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த குளத்தின் கரை பகுதியை ஆக்கிரமித்து, 15க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் சேகரமாகிறது. இதனால், குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.
ஊராட்சி அலுவலகம் அருகிலேயே இருந்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.