/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்புகளில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
/
குடியிருப்புகளில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
குடியிருப்புகளில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
குடியிருப்புகளில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
ADDED : ஜன 03, 2026 05:42 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியுள்ள கழிவுநீரால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடம்பத்துார் ஊராட்சியில் ரயில் நிலையம் செல்லும் சாலையை பயன்படுத்தி, அப்பகுதி மக்கள் ரயில் நிலையம் மற்றும் அதிகத்துார் சென்று வருகின்றனர்.
இச்சாலையில் பவுண்டு தெரு, எக்ஸ்.எம்.எல்.ஏ., தெரு மற்றும் செல்வ விநாயகர் நகர் செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை சந்திப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நடந்து செல்ல கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இவ்வழியே செல்லும் பகுதி மக்கள் மற்றும் ரயில் நிலையம் செல்லும் பயணியருக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அருகிலேயே ஊராட்சி அலுவலகம் இருந்தும், கால்வாய் அடைப்பை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் குளம்போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, கால்வாய் அடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் மற்றும் ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

