/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையின் பல இடங்கள் சேதம் விரைந்து சீரமைக்க கோரிக்கை
/
சாலையின் பல இடங்கள் சேதம் விரைந்து சீரமைக்க கோரிக்கை
சாலையின் பல இடங்கள் சேதம் விரைந்து சீரமைக்க கோரிக்கை
சாலையின் பல இடங்கள் சேதம் விரைந்து சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 03, 2026 05:43 AM

கும்மிடிப்பூண்டி: தொடர் மழையின் போது சேதமடைந்த நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என. வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில் தாணிப்பூண்டி சந்திப்பு முதல் பொம்மாஜிகுளம் வரையிலான, 4 கி.மீ., சாலை, கடந்த டிசம்பர் மாத மழையின் போது சேதமடைந்தது.
இதனால், சாலையின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வழியாக சென்று வரும் கனரக வாகனங்கள் ஆட்டம் கண்டபடி சென்று வருகின்றன.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மாநில நெடுஞ்சாலை துறையினர் உடனே நடவடிக்கை எடுத்து, சாலை பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.