/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடையும் சாலையால் அவதி கல்குவாரியை முற்றுகையிட்ட மக்கள்
/
சேதமடையும் சாலையால் அவதி கல்குவாரியை முற்றுகையிட்ட மக்கள்
சேதமடையும் சாலையால் அவதி கல்குவாரியை முற்றுகையிட்ட மக்கள்
சேதமடையும் சாலையால் அவதி கல்குவாரியை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஆக 23, 2025 01:00 AM

திருத்தணி:திருத்தணி அருகே கிராம சாலை சேதமடைவதாக கூறி, கல்குவாரியை மக்கள் முற்றுகையிட்டனர்.
திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் ஊராட்சியில், சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார், 40, என்பவர், கல்குவாரி ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். சில ஆண்டுகளாக கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது.
நேற்று மதியம் எல்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கல்குவாரியில் இரவு நேரங்களில் தொடர்ந்து பணிகள் நடைபெறுவதாக கூறி, கல்குவாரியில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருத்தணி தாசில்தார் மலர்விழி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார்.
அப்போது மக்கள் கூறியதாவது:
இரவு நேரங்களில் கல்குவாரியில் இருந்து அதிகளவு லாரிகள் செல்கின்றன.
இதனால், எல்லம்பள்ளி கிராம சாலை முழுதுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
எனவே, சாலையை சீரமைக்க வேண்டும். பள்ளி நேரங்களில் லாரிகள் செல்வதை தடுக்க வேண்டும். மக்களுக்கு தகவல் தெரிவித்த பின்னரே, குவாரிகளுக்கு வெடி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய ஆய்வுக்கு பின்னரே கல்குவாரி மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படும்,' என, தாசில்தார் தெரிவித்தார். இதை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.