/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதையை அடைக்க முயற்சி கலெக்டரிடம் மக்கள் புகார்
/
பாதையை அடைக்க முயற்சி கலெக்டரிடம் மக்கள் புகார்
ADDED : டிச 17, 2025 06:54 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில், ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் ஆறு நடைமேடைகள் உள்ளன.
இதில், கூவம் ஆற்றை ஒட்டி ஆறாவது நடைமேடை அமைந்துள்ளது.
இந்த நடைமேடையை ஒட்டியுள்ள சாலையை, அப்பகுதியில் வசிக்கும் கற்குழாய் தெரு, மஹாத்மா காந்தி நகர் மக்கள், 40 ஆண்டுகளாக பயன் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் இப்பாதையை, ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது எனக் கூறி, நேற்று காலை பாதையின் இருபகுதியிலும் தடுப்பு அமைத்து, அடைக்கும் பணியை துவங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மஹாத்மா காந்தி நகரைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதன்படி நேற்று, கலெக்டர் பிரதாப், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது. அப்பகுதி மக்கள் கலெக்டரிடம், 'நாங்கள் 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை அடைக்க கூடாது' என வலியுறுத்தினர். ரயில்வே துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ., உறுதியளித்தனர்.

