/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரு கிராமம் இரு ஊராட்சிகளில் வருவதால் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை வழங்க மறுக்கும் மக்கள் காவல் நிலையத்தில் வருவாய் துறை புகார்

ADDED : நவ 23, 2025 02:57 AM
திருவாலங்காடு: பூண்டி ஒன்றியம் மேட்டுப்பாளையம் கிராமத்தில், இரண்டு தெருக்கள் வெவ்வேறு ஊராட்சிகளில் வருவதால், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லல்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது, பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர்., படிவத்தை ஒப்படைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேட்டுப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில், கொள்ளாபுரி அம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு என, இரண்டு தெருக்கள் உள்ளன.
சிரமம் இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு உட்பட்ட கொள்ளாபுரி அம்மன் கோவில் தெரு சென்றாயன்பாளையம் ஊராட்சியில் வருகிறது. இங்கு, 597 வாக்காளர்கள் உள்ளனர். விநாயகர் கோவில் தெரு, தோமூர் ஊராட்சியில் வருகிறது. இங்கு, 478 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரே கிராமத்தில் உள்ள தெருக்கள், இரு வேறு ஊராட்சியில் வருவதால், அப்பகுதியினர் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
சிக்கல் நீடிப்பு இதுகுறித்து, சென்றாயன்பாளையம் பா.ஜ., கவுன்சிலரும், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவருமான சண் முகம் கூறியதாவது:
ஒரே கிராமம் இரண்டு ஊராட்சியில் வருவதால், வருவாய் துறையில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் உள்ளது. அதேபோல, கிராமத்தில் பிரச்னை என, காவல் நிலையத்தை தொடர்பு கொண்டால் கனகம்மாசத்திரம் மற்றும் பென்னாலூர்பேட்டை போலீசார், எங்கள் எல்லையில் வரவில்லை என, மாறி மாறி கூறுகின்றனர்.
இதனால், புகாரை எங்கு அளிப்பது என, தெரி யாமல் குழப்பம் அடைந்து வருகிறோம். ஊராட்சி அலுவலகம் மற்றும் ஓட்டு போடும் மையம் உள்ளிட்டவை மாறுபடுகிறது. மேலும், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது .
இவ்வாறு அவர் கூறினார்.