/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சர்க்கரை ஆலையில் இயந்திர கோளாறு கரும்பு அரவை 50 சதவீதம் குறைப்பு
/
சர்க்கரை ஆலையில் இயந்திர கோளாறு கரும்பு அரவை 50 சதவீதம் குறைப்பு
சர்க்கரை ஆலையில் இயந்திர கோளாறு கரும்பு அரவை 50 சதவீதம் குறைப்பு
சர்க்கரை ஆலையில் இயந்திர கோளாறு கரும்பு அரவை 50 சதவீதம் குறைப்பு
ADDED : நவ 23, 2025 02:56 AM
திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இயந்திர கோளாறு காரணமாக 50 சதவீத கரும்பு மட்டுமே அரவை செய்யப்படுகிறது. இதனால், வளாகத்தில் கரும்பு ஏற்றி வந்த, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டுள்ளன.
திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு திருத்தணி, அரக்கோணம், திருவாலங்காடு, உள்ளிட்ட ஏழு கரும்பு கோட்ட அலுவலகம் மூலம், விவசாயிகள் கரும்புகளை டிராக்டர் மற்றும் லாரிகளில் அனுப்புகின்றனர்.
நடப்பாண்டுக்கான அரவை இலக்காக, 2 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் அரவை துவங்கி நடந்து வருகிறது. அரவைக்கு, ஒரு ஷிப்டில் 70 வாகனங்களில் வரும் கரும்புகள் அரைக்கப்படும்.
இந்நிலையில், சர்க்கரை ஆலையில் 'பேனல் பாடி' எனப்படும், கரும்பை சர்க்கரையாக மாற்றி அனுப்பும் இரண்டில், ஒரு இயந்திரம் பழுதாகியுள்ளதால், 50 சதவீதம் மட்டுமே அரவை செய்யப்படுகிறது.
இதனால். ஒரு ஷிப்டுக்கு வரும், 70 வாகனங்களில், 35 வாகனங்களில் உள்ள கரும்புகள் தேக்கமடைந்துள்ளன. அதன்படி, மூன்று ஷிப்டில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
கரும்பு ஏற்றி வந்த வாகனங்கள் இடநெருக்கடியால், கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை, திருவள்ளூர் ----- அரக்கோணம் நான்கு வழிச்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர் கூறுகையில், 'பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் பழுது நீக்கப்பட்டு அரவை சீராகும்' என்றார்.

