/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏ.என்.குப்பம் சாலை வேகத்தடையில் வர்ணம் அடிக்க மக்கள் கோரிக்கை
/
ஏ.என்.குப்பம் சாலை வேகத்தடையில் வர்ணம் அடிக்க மக்கள் கோரிக்கை
ஏ.என்.குப்பம் சாலை வேகத்தடையில் வர்ணம் அடிக்க மக்கள் கோரிக்கை
ஏ.என்.குப்பம் சாலை வேகத்தடையில் வர்ணம் அடிக்க மக்கள் கோரிக்கை
ADDED : நவ 09, 2025 03:17 AM
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில் இருந்து ஏ.என்.குப்பம் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளில், வர்ணம் அடிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவரைப்பேட்டை அருகே கீழ்முதலம்பேடு கிராமத்தில் துவங்கி மேல்முதலம்பேடு, ஏ.என்.குப்பம், ஆர்.என்.கண்டிகை வழியாக லட்சுமிபுரம் வரையிலான சாலை, தமிழ்நாடு கிராமபுற சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளது. இச்சாலையை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர்.
இந்த 9 கி.மீ., சாலையில், மொத்தம் 50 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் இருந்த வர்ணம் முற்றிலும் அழிந்துவிட்டது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் சிலர், நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வேகத்தடைகளுக்கு உடனே வர்ணம் அடித்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.