/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறு மின்விசை குழாய் பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
சிறு மின்விசை குழாய் பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
சிறு மின்விசை குழாய் பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
சிறு மின்விசை குழாய் பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 21, 2025 11:51 PM

திருவாலங்காடு ;மணவூரில் சிறுமின் விசை குழாயை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சியில் உள்ள திருவாலங்காடு சாலையில், அப்பகுதி மக்களின் கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக, 10 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி சார்பில், மினி டேங்குடன் கூடிய சிறுமின்விசை குழாய் அமைக்கப்பட்டது.
இப்பகுதி மக்கள் மினி டேங்க் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், மினி டேங்கில் தண்ணீர் நிரப்புவதற்கான நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதானது.
இதனால், கூடுதல் குடிநீர் தேவைக்கு, மினி டேங்கில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.
எனவே, நீர்மூழ்கி மின்மோட்டாரை சீரமைத்து, சிறுமின் விசை குழாயை பயன்பாட்டிற்கு கொண்டுவர, மணவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

