/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பில் தாமரை குளம் மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை
/
ஆக்கிரமிப்பில் தாமரை குளம் மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்பில் தாமரை குளம் மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்பில் தாமரை குளம் மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை
ADDED : நவ 25, 2024 02:30 AM

ஆவடி,:திருமுல்லைவாயில் குளக்கரை சாலையில், ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது. சுற்றுவட்டாரா பகுதிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. குளத்தில் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. குப்பை கொட்டப்பட்டு, கழிவுநீர் பாயும் குளமாக மாறி வருகிறது. தற்போது, குளத்தில் 20 அடி ஆழத்திற்கு, 49 லட்சம் லிட்டர் தண்ணீர் இருப்பதாக அளவிடப்பட்டுள்ளது.
தாமரை குளத்தில் பாயும் கழிவுநீரால், சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மொத்தம், 6.5 ஏக்கரில் இருந்த குளம் ஆக்கிரமிப்பில் சிக்கி, 4 ஏக்கராக சுருங்கி விட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கள் நடப்பதால், குளம் காணாமல் போய்விடுமோ என, அப்பகுதி வாசிகள் அஞ்சுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி, குளத்தை துார்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து, சீரமைக்க எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.