/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் கழிவுநீர் தேக்கம் நோய் பரவும் அச்சத்தில் மக்கள்
/
சாலையோரம் கழிவுநீர் தேக்கம் நோய் பரவும் அச்சத்தில் மக்கள்
சாலையோரம் கழிவுநீர் தேக்கம் நோய் பரவும் அச்சத்தில் மக்கள்
சாலையோரம் கழிவுநீர் தேக்கம் நோய் பரவும் அச்சத்தில் மக்கள்
ADDED : செப் 10, 2025 03:24 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே திப்பன்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் பஜார் மற்றும் திப்பன்பாளையம் கிராமத்தின் ஒரு பகுதி, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ், திப்பன்பாளையம் எல்லைக்கு உட்பட்ட இணைப்பு சாலையோரம், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இணைப்பு சாலையோர கால்வாயில், கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதியின் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இக்கால்வாயில் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால், கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, திப்பன்பாளையம் பகுதியில் தாழ்வாக உள்ள இணைப்பு சாலையோரம், பல மாதங்களாக தேங்கியுள்ளது.
இதனால், அப்பகுதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதுடன், பகுதிமக்கள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி, கால்வாயில் கழிவுநீர் வடிந்து செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.