/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அணைக்கட்டு சாலையில் முட்செடி பாலேஸ்வரத்தில் மக்கள் அவதி
/
அணைக்கட்டு சாலையில் முட்செடி பாலேஸ்வரத்தில் மக்கள் அவதி
அணைக்கட்டு சாலையில் முட்செடி பாலேஸ்வரத்தில் மக்கள் அவதி
அணைக்கட்டு சாலையில் முட்செடி பாலேஸ்வரத்தில் மக்கள் அவதி
ADDED : மே 23, 2025 03:09 AM

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, பாலேஸ்வரம் அணைக்கட்டு செல்லும் பாதையில் தார்சாலை உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் கூலி வேலைக்கு செல்வது.
பாலேஸ்வரம் அணைக்கட்டிற்கு மக்கள் விடுமுறை நாட்களில் சென்று வருகின்றனர்.
பெரியபாளையம் - ஆரணி மார்க்கத்தில் இடதுபுறம் செல்லும் சாலையில், இரண்டு பக்கமும் முட்செடிகள் வளர்ந்துள்ளன.
இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, எல்லாபுரம் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலேஸ்வரம் அணைக்கட்டு செல்லும் சாலையில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.