/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து வசதி இல்லாமல் தேவலாம்பாபுரம் மக்கள் அவதி
/
பேருந்து வசதி இல்லாமல் தேவலாம்பாபுரம் மக்கள் அவதி
ADDED : ஆக 29, 2025 12:38 AM
ஆர்.கே.பேட்டை ஆந்திர மாநில எல்லையோர மலைப்பகுதியில் அமைந்துள்ள தமிழக பகுதிமக்கள், பேருந்து வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் தேவலாம்பாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியை ஒட்டி ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லை அமைந்துள்ளது.
ஆர்.கே.பேட்டையில் இருந்து பொன்னை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், புதுார்மேடு கூட்டுச்சாலையில், தேவலாம்பாபுரம் இணைப்பு சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலையில் இருந்து, 2 கி.மீ., நடந்து சென்றால் தான் தேவலாம்பாபுரம் கிராமத்தை அடைய முடியும்.
இந்த மார்க்கத்தில் பேருந்து வசதி கிடையாது. ஆனால், ஆந்திர மாநில பேருந்துகள், இந்த வழியாக சித்துார் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
தேவலாம்பாபுரம் கிராமத்தில் இருந்து விடியங்காடு அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், ஆர்.கே.பேட்டைக்கு செல்வோரும், புதுார்மேடு வரை நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, தேவலாம்பாபுரத்தில் இருந்து காட்டூர் மற்றும் புதுார்மேடு வழியாக ஆர்.கே.பேட்டைக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.