/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரெட்டம்பேடு சாலையை அகலப்படுத்த கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை
/
ரெட்டம்பேடு சாலையை அகலப்படுத்த கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை
ரெட்டம்பேடு சாலையை அகலப்படுத்த கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை
ரெட்டம்பேடு சாலையை அகலப்படுத்த கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை
ADDED : நவ 05, 2025 09:16 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து, தீயணைப்பு நிலையம் வரையிலான ரெட்டம்பேடு சாலையை, 60 அடி சாலையைாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி ஜி.என்.டி., சாலையில் இருந்து, ரெட்டம்பேடு கிராமம் வரையிலான, 5 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில், ஜி.என்.டி., சாலை சந்திப்பில் இருந்து, தீயணைப்பு நிலையம் வரையிலான 1.5 கி.மீ., சாலை, கும்மிடிப்பூண்டி நகரின் மற்றொரு பஜார் பகுதியாக மாறி வருகிறது.
இந்த 1.5 கி.மீ., சாலையில், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், டி.எஸ்.பி., முகாம் அலுவலகம், நீதிமன்றம், பேரூராட்சி அலுவலகம், திருமண மண்டபங்கள், வங்கி கிளைகள் மற்றும் 80க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
மேலும், இச்சாலையில் என்.எம்.எஸ்., நகர், எம்.எஸ்.ஆர்., கார்டன், குமரன் நகர், குருசந்திரா நகர், ஏ.வி.எம்., நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இச்சாலை, ஐந்து ஆண்டு களுக்கு முன் வரை, ஆக்கிரப்பு கட்டடங்களால் குறுகலாக இருந்தது. மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டது முதல் தற்போது வரை, சாலை அகலமாக மாறியுள்ளது.
ஆனாலும், முன்பிருந்த 20 அடி அகல சாலையே தற்போது வரை உள்ளது. இதனால், திருமண நாட்களில், இச்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. அவசரமாக செல்லும் தீயணைப்பு வாகனமும் நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே, 1.5 கி.மீ.,க்கு, 60 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

