/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருளில் மூழ்கும் சாலை இரவில் பக்தர்கள் அச்சம்
/
இருளில் மூழ்கும் சாலை இரவில் பக்தர்கள் அச்சம்
ADDED : நவ 05, 2025 09:17 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மின் விளக்கு வசதியின்றி, இரவு நேரத்தில் இருளில் முழ்கும் சாலையால், தான்தோன்றீஸ்வரர் கோவில் சென்று வரும் பக்தர்கள், அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு, விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி - ரெட்டம்பேடு நெடுஞ்சாலையில், காவல் நிலையம் அருகே பிரிந்து செல்லும் தேர்வழி கிராம சாலையில், 300 மீ., தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
இச்சாலையில், 300 மீ., துாரம் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் இருளில் மூழ் குகிறது. இதனால், மாலை 6:30 மணிக்கு மேல் கோவில் சென்று வரும் பக்தர்கள், அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், மொபைல் போன் டார்ச் லைட்டை நம்பி செல்ல வேண்டிருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி, வழிப்பறி சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பெண்கள், தனியாக செல்லாமல் கூட்டமாக சென்று வருகின்றனர்.
எனவே, பக்தர்களின் நலன் கருதி, மின் விளக்கு வசதி ஏற்படுத்த, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

