/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுாலகம் முன் இரும்பு மின்கம்பம் பொன்னேரியில் வாசகர்கள் அச்சம்
/
நுாலகம் முன் இரும்பு மின்கம்பம் பொன்னேரியில் வாசகர்கள் அச்சம்
நுாலகம் முன் இரும்பு மின்கம்பம் பொன்னேரியில் வாசகர்கள் அச்சம்
நுாலகம் முன் இரும்பு மின்கம்பம் பொன்னேரியில் வாசகர்கள் அச்சம்
ADDED : நவ 05, 2025 09:17 PM
பொன்னேரி: பொன்னேரி கிளை நுாலகம் முகப்பில் உள்ள இரும்பு மின்கம்பத்தில், ஏராளமான மின் ஒயர்கள் செல்வதால், வாசகர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பொன்னேரி, புதிய தேரடி தெருவில் உள்ள கிளை நுாலகத்திற்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் படிக்க வந்து செல்கின்றனர். கல்லுாரி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு படிப்போரும் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த கிளை நுாலகத்தின் முகப்பில், இரும்பு மின்கம்பம் உள்ளது. இதில், குறைந்த மற்றும் உயரழுத்த மின் ஒயர்கள் அதிகளவில் உள்ளன. அதிலிருந்து, குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
துருப்பிடித்து கிடக்கும் மின்கம்பத்தில், அதிக அளவிலான மின் ஒயர்கள் செல்வதால், கிளை நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் மாணவர்கள், அதன் அருகே செல்ல அச்சப்படுகின்றனர். மின்கம்பிகள், இரும்பு கம்பத்தில் உரசும்போது, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நுாலக கட்டடத்தை ஒட்டி, குடியிருப்புகளுக்கு செல்லும் மின் ஒயர்களும் தாழ்வாக செல்கின்றன. இதனால், மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாசகர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், கிளை நுாலகத்தின் முகப்பில் உள்ள இரும்பு மின்கம்பத்தை மாற்றிவிட்டு, தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை சரிசெய்ய, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

