/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடியும் அபாயத்தில் குடிநீர் தொட்டி பிரையாங்குப்பம் மக்கள் 'திக்... திக்'

ADDED : ஆக 28, 2025 01:54 AM

பிரையாங்குப்பம்:பிரையாங்குப்பம் பகுதியில் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால், பகுதிமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் பிரையாங்குப்பம் ஊராட்சியில் பண்ணுார் கிராமம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள திருப்பாச்சூர் -- கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையோரம், 15 ஆண்டுகளுக்கு முன் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த தொட்டி, 2012 -- 13ல், ஊரக வளர்ச்சி கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், 28,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை.
இதனால், நீர்த்தேக்க தொட்டியின் பல்வேறு இடங்களில் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருப்பதால், பகுதிமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரையாங்குப்பம் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.