/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 12, 2025 10:24 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அமைக்க, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகிறது. அதை மறுசுழற்சி செய்ய ஒன்றிய நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் அருகே அரசு நிலத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஒன்றிய நிர்வாகம், நேற்று இயந்திரத்தை கொண்டு சென்ற போது, குருவராஜகண்டிகை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., சந்திரசேகர், கிராம மக்களிடம் பேசினார்.
'இதனால் எந்த பாதிப்பும் இல்லை' என, விளக்கம் அளித்தும், கிராம மக்கள் ஏற்க மறுத்தனர். அதன்பின், அந்த இயந்திரத்தை அங்கு நிறுவும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

