/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாய் பணிக்கு 'ரெஸ்ட்' மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
மழைநீர் கால்வாய் பணிக்கு 'ரெஸ்ட்' மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
மழைநீர் கால்வாய் பணிக்கு 'ரெஸ்ட்' மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
மழைநீர் கால்வாய் பணிக்கு 'ரெஸ்ட்' மக்கள், வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : ஆக 25, 2025 01:31 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், மழைநீர் கால்வாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட கும்மமுனிமங்களம், இரட்டைமலை சீனிவாசனார் தெருவில், 10 லட்சம் ரூபாயில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த மாதம் இப்பணிகளுக்காக, அங்கு ஏற்கனவே சேதமடைந்த கால்வாய் கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு பள்ளங்கள் தோண்டப்பட்டன.
பின், இரும்பு கம்பிகள் இல்லாமல், கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் கட்டுமானம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு, குடியிருப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மற்ற பகுதிகளில் இரும்பு கம்பி போட்டு, கான்கிரீட் கட்டுமானம் அமைக்கும்போது, இங்கு மட்டும் ஏன் அவ்வாறு மேற்கொள்ளவில்லை' எனக்கூறி பணிகளை நிறுத்தினர்.
இதையடுத்து, கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. கடந்த 20 நாட்களாக மேற்கண்ட பகுதியில் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. அதில், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளது.
சாலையில் இருந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் குடியிருப்பு மக்கள் தவித்து வருகின்றனர்.
திறந்த நிலையில் இருப்பதால், சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. இரட்டைமலை சீனிவாசனார் சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளும் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.