/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசுக்கடியால் தவிக்கும் மக்கள் ஓராண்டாக மருந்து தெளிக்காத அவலம்
/
கொசுக்கடியால் தவிக்கும் மக்கள் ஓராண்டாக மருந்து தெளிக்காத அவலம்
கொசுக்கடியால் தவிக்கும் மக்கள் ஓராண்டாக மருந்து தெளிக்காத அவலம்
கொசுக்கடியால் தவிக்கும் மக்கள் ஓராண்டாக மருந்து தெளிக்காத அவலம்
ADDED : நவ 21, 2025 03:31 AM
திருவாலங்காடு: சின்னம்மாபேட்டையில் கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதால் மக்கள் நோய் பாதிப்பில் தவிக்கின்றனர்.
சாக்கடை கால்வாய் துார் வாருவதில் ஊராட்சி மெத்தனமாக செயல்படுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் குப்பை கொட்டப்படுவதால்கழிவுநீர் தேங்கி நின்று, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால்ஊராட்சி பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஊராட்சியில் கொசு மருந்து ஓராண்டுக்கும் மேலாக தெளிக்கவில்லை. சாக்கடை கால்வாய்கள் பல மாதங்களாக துார்வாரப்படாமல் உள்ளது.
இதனால் மக்கள் நோய் பாதிப்பில் சிக்கி அவதிப்படுகின்றனர்' என்றனர்.