/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் மின் மோட்டார் மாயம் குடிநீருக்கு அல்லல்படும் மக்கள்
/
குடிநீர் மின் மோட்டார் மாயம் குடிநீருக்கு அல்லல்படும் மக்கள்
குடிநீர் மின் மோட்டார் மாயம் குடிநீருக்கு அல்லல்படும் மக்கள்
குடிநீர் மின் மோட்டார் மாயம் குடிநீருக்கு அல்லல்படும் மக்கள்
ADDED : மே 14, 2025 06:23 PM
அதிகத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் ஊராட்சிக்குட்பட்ட இருளர் காலனி பகுதிவாசிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட பகுதியில் இருந்த மின்மோட்டார், சில நாட்களுக்கு முன் மாயமானது.
இதன் காரணமாக, பகுதிவாசிகள் குடிநீருக்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய மின்மோட்டார் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கடம்பத்துார் ஒன்றிய அதிகாரி கூறுகையில், 'அதிகத்துார் இருளர் காலனியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.