/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தார்ச்சாலைக்காக 'கட்டுகளுடன்' வீதிக்கு வந்து போராடிய மக்கள்
/
தார்ச்சாலைக்காக 'கட்டுகளுடன்' வீதிக்கு வந்து போராடிய மக்கள்
தார்ச்சாலைக்காக 'கட்டுகளுடன்' வீதிக்கு வந்து போராடிய மக்கள்
தார்ச்சாலைக்காக 'கட்டுகளுடன்' வீதிக்கு வந்து போராடிய மக்கள்
ADDED : டிச 31, 2025 03:48 AM
திருநின்றவூர்: நத்தமேடு ஊராட்சி பகுதியில், 15 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் தலை, கை கால்களில் 'கட்டுகளுடன்' வீதிக்கு வந்து பகுதிமக்கள் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநின்றவூர் அடுத்த நத்தமேடு ஊராட்சி, மூன்றாவது வார்டில், எம்.எஸ்.ராயல் கேட் சாலை, சரவணா நகர், முருகன் நகர், ஜெயம் நகர், சூரிய கலா நகர் உள்ளிட்ட 10 நகர்களில் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
மேற்கண்ட தெருக்களை இணைக்கும் 2.5 கி.மீ., துாரத்திற்கு, தார்ச்சாலை வசதி இல்லை. கடந்த 2022ல் செம்மண் சாலை போடப்பட்டது. அதுவும் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
மோசமான சாலையால், விபத்தில் சிக்கி மூன்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழை காலத்தில் நிலைமை படுமோசமாக மாறி விடுகிறது.
பகுதி முழுதும் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
அவசர சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வருவதிலும் சிக்கல் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதனால் விரக்தியடைந்த பகுதிமக்கள், 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்து சாலையின் நிலைமையை எடுத்துரைக்கும் விதமாக, எம்.எஸ்.ராயல் கேட் சாலையில், தலை, கை கால்களில் காயங்களுக்கு கட்டு போட்டது போன்று, நேற்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சி.எம்.டி.ஏ.,வால் அங்கீகரிக்கப்பட்ட மனையாக இருந்தும், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி 15 ஆண்டுகளாக சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை.
முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர், எம்.எல்.ஏ., ஊராட்சி நிர்வாகம் என, பலரிடம் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை' என்றனர்.

