/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பு இல்லாத தரைப்பாலம் அச்சத்தில் பயணிக்கும் மக்கள்
/
தடுப்பு இல்லாத தரைப்பாலம் அச்சத்தில் பயணிக்கும் மக்கள்
தடுப்பு இல்லாத தரைப்பாலம் அச்சத்தில் பயணிக்கும் மக்கள்
தடுப்பு இல்லாத தரைப்பாலம் அச்சத்தில் பயணிக்கும் மக்கள்
ADDED : அக் 19, 2025 10:15 PM

பொன்னேரி: ஆசானபூதுார்மேடு கிராமத்தில், மழைநீர் கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இல்லாததால், கிராம மக்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த ஆசானபூதுார்மேடு கிராமத்தில், மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலம் பராமரிப்பின்றி உள்ளது. தரைப்பாலத்தின், கான்கிரீட் கட்டுமானங்கள் ஆங்காங்கே சேதமடைந்தும், இருபுறமும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படாமலும் உள்ளது.
தற்போது, கால்வாயில் மழைநீர் செல்வதால், தரைப்பாலத்தை கடந்து செல்லும் கிராம மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள், கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.
இந்த தரைப்பாலத்தின் வழியாக பெரும்பேடு, வீரங்கிமேடு, மடிமைகண்டிகை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், தரைப்பாலத்தை புதுப்பித்து, இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.