/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராத மின்மாற்றி 2 ஆண்டாக காத்திருக்கும் மக்கள்
/
பயன்பாட்டிற்கு வராத மின்மாற்றி 2 ஆண்டாக காத்திருக்கும் மக்கள்
பயன்பாட்டிற்கு வராத மின்மாற்றி 2 ஆண்டாக காத்திருக்கும் மக்கள்
பயன்பாட்டிற்கு வராத மின்மாற்றி 2 ஆண்டாக காத்திருக்கும் மக்கள்
ADDED : செப் 17, 2024 10:46 PM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மோட்டார்களுக்கு பொன்னேரி துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு, ஒரே மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவதால் மின்பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால், குடியிருப்புகளில் மின் உபயோக பொருட்கள் பழுதடைகின்றன. தற்போது, விவசாய பணிகளுக்காக ஆழ்துளை மோட்டார் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதால், அடிக்கடி குறைந்த மின்அழுத்தம் ஏற்படுகிறது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு என, தனியாக மின்மாற்றி ஒன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் அருகே, 2022ல் பொருத்தப்பட்டது.
கம்பங்கள் நடப்பட்டு, அதில் மின்மாற்றியும் பொருத்தப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக மின் ஒயர்களை கொண்டு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. மின்மாற்றி பொருத்தியும், இணைப்பு இல்லாததால் கம்மவார்பாளையத்தில் மின்பற்றாக்குறை தொடர்கிறது.
இது தொடர்பாக, கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தியும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே, பொன்னேரி மின்வாரியத்தினர் உடனடியாக மின்மாற்றியை பயனுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

